நெல்சன் மண்டேலாவின் பேத்தி ’ஸோலோகா மண்டேலா‘ தனது 43 ஆவது வயதில் நேற்று காலமானார்.
தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்த ஸோலோகா மண்டேலா கடந்த சில காலமாக மெட்டாஸ்டேடிக் எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்