பிரித்தானியாவின் தெற்கு லண்டன் Croydon பகுதியில், independent பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமி ஒருவர் பேருந்துக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு லண்டனில் க்ரோய்டனில் உள்ள விட்கிஃப்ட் கடைத்தொகுதிக்கு அருகில் அவர் பலமுறை குத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றில் தாக்குதல் நடத்தியவர் தனது சட்டைப் பையில் இருந்து கத்தியை வெளியில் எடுத்து குத்தியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெல்லஸ்லி வீதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு 2 நிமிடங்களில் சென்ற பொலிசார், சிறுமிக்கு தெரிந்தவர் என்று நம்பப்படும் 17 வயது சிறுவனைக் கைது செய்துள்ளனர்.
காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர், அதே நேரத்தில் சந்தேக நபர் அருகிலுள்ள நியூ அடிங்டனில் கத்தியால் குத்தப்பட்ட 75 நிமிடங்களில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.