எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் இன்று கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரி மேத்யூ ஹின்சனும் (Matthew Hinson) கலந்து கொண்டிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாக விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளினால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது விளக்கமளித்தார்.
மேலும், அரசாங்கமானது மக்களின் உரிமைகளை மீறும் வகையில், தேரர்தலை திட்டமிட்டு ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.