களுபோவில் பகுதியிலில் காரொன்றுடன் முச்சக்கரவண்டியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று மாலை குறித்த விபத்தானது சம்பவித்துள்ளதாகவும் இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு பெண், தாய் மற்றும் அவரது குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த குழந்தை மேதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.