கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் எனவு, அத் திணைக்களம் தெரிவித்துள்ளது