2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை)
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்களுக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது.
அதற்கமைய நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Steven Smith 46 ஓட்டங்களையும் David Warner 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்தியா அணி சார்பில் R Jadeja 3 விக்கெட்டுக்களையும் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 200 என்ற வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்தியா அணி சார்பில் அதிரடியாக ஆடிய KL Rahul 97 ஓட்டங்களையும் V Kohli 85 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Josh Hazlewood 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.