2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் 10 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. லக்னோவில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 6 உலகக் கிண்ண போட்டிகளில் மூன்றில் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 1992 இல் இடம்பெற்ற தனது முதலாவது உலகக்கிண்ண அறிமுக போட்டியிலும் 2019 இல் இடம்பெற்ற போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்தியிருந்தது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ஜஸ்பிரிட் பும்ப்ரா 4 விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு 273 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 35 ஓய்வார்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 131 ஓட்டங்களை பெற்ற அதேவேளை விராட் கோலி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ரஷீத் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவு சிஐயப்பட்டார்.
இந்தியா அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளோடு புல்லிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.