மண்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மண் சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ இடையே வாகன போக்குவரத்து தடைபட்டாலும், நெடுஞ்சாலை பேருந்துகள் வழமை போல் இயங்கி வருவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் மாத்தறையிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் வெவேறு சந்ததிகளின் ஊடாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.