யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்மடம் பகுதியில் உள்ள கடை ஒன்றிலேயே நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த கடையினுள் நுழைந்த அவர்கள் அங்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளதாகக் கூறி அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த 23,000 ரூபாயை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.