மன்னாரில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.