இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே தீவிரமாகப் போர் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை கேலிசெய்யும் வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த இணையவாசிகள் சிலர் சமூகவலைத்தளத்தில் வீடியோக்ளைப் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக போரில் உயிரிழந்தவர்களைப் போன்றும், படுகாயமடைந்தவர்களைப் போன்றும் வேடமிட்டு பாலஸ்தீனியர்களை கேலி செய்வதோடு, அம்மக்கள் நீர், உணவு, மின்சாரமின்றி தவிப்பதையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளனர்.
அது மாத்திரமல்லாது குறித்த காணொளிகளில் சிறுவர்களையும் இணையவாசிகள் பயன்படுத்தியுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளிகளைத் தொகுத்து சர்வதேச ஊடகமொன்று இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில் அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ மூலம்-Al Jazeera English
Videos of Israeli content creators making fun of Palestinians suffering without water, and electricity in Gaza are going viral ⤵️ pic.twitter.com/nwnC4kucMb
— Al Jazeera English (@AJEnglish) October 26, 2023