மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்திடம் இருந்த கிடைத்த சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது