பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே இராணுவத்தினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து அடையாளந் தெரியாத பயங்கவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதலில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 52 இராணவு பலூசிஸ்தான் மாகாணத்தில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகக் குற்றம் சாட்டி பல்வேறு இனக்குழுக்கள் இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை 2 நாட்களுக்கு முன் பொலிஸாரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.