காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்வுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று (6) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இச் சந்திப்பில் உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் , உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது சீன அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு விளக்கமளித்த தூதுவர் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பிலும் இதன்போது கேட்டறிந்துகொண்டார்.