இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்சரிவு ஏற்பட்டதால் 40 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர் 72 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்களில் எவரும் இதுவரையில் மீட்கப்படவில்லை.
இதனால், சுரங்கத்திற்கு வெளியில் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகண்ட் மாநிலத்தின்; யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கப்பாதை சரிந்து விபத்திற்குள்ளானது.