இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், கிரிக்கெட் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவொன்றுக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளளார்.
இருப்பினும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மீது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.