புட்டு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் வீட்டில் புட்டு உண்டுகொண்டிருந்தவேளை திடீரென அவருக்கு புரைக்கேறியுள்ளதாகவும், இதனையடுத்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக அவர் தெரிவித்தவாறே மயங்கிவிழுந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனையில் சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்துக் கொண்டமையினால் மரணம் சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவமானது யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















