கோப் குழுவின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று (20) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் நாடாளுமன்றத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
தற்போதைய கோப் குழுவை தொடர்வதா அல்லது அதனை கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
மறு அறிவித்தல் வரை கோப் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை மீதான விசாரணையில் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடு குறித்த விமர்சனங்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.