தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் திமுக இந்த ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் திமுக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தெலங்கானா சட்டசபை தேர்தலில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க., ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.