அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நபர் ஒருவரை தாக்கி கொலை செய்த குற்றச் சாட்டில், தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம்(22) குறித்த நால்வருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.