நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய, சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சட்டத்தரணிகள் சங்கள் இது தொடர்பாக எனக்கு அறிவிக்கவும் இல்லை, அழைக்கவும் இல்லை, நான் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவும் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் இதில் கையெழுத்திட்டிருந்தாலும், அந்த ஆவணம் அவர்களின் கட்சி மத்திய குழுக்கூட்டத்தில் கூட இதற்கு இணக்கம் வெளியிடப்படவில்லை.
அப்படியிருக்கையில், நான் கைச்சாத்திட்டேன் என எவ்வாறு கூற முடியும்? சட்டத்தரணிகள் சங்கத்துடன் சில கட்சித் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள்.
ஆனால், அந்தச் சங்கம் எம்முடன் கலந்துரையாட நாடாளுமன்றுக்கு வருகைத் தந்திருக்க முடியும். நான் யாருடனும் பேசவில்லை” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.