அண்மையில் மட்டக்களப்புக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் உட்பட 4 பேரையும் இரு ஆட்பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை நீதிமன்றிற்கு சமூகமளிக்காத மேலும் 2 பேருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அடுத்தவருடம் மாச் 18 ஆம் திகதிக்கு குறித்த வழக்கை ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.