போர்நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் 5 ஆவது நாளான நேற்று 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர் சிறுமிகள் அடங்குவதாக கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் காசாவில் இருந்து 12 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் 2 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை காசாவில் இருந்து 60 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 80-க்கும் மேற்பட்டோரும் இஸ்ரேலில் உள்ள சிறைகளில் இருந்து 180-க்கும் மேற்பட்டோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பணய கைதிகளையும் விடுவித்தாலும் ஹமாஸ் அமைப்பை அழிப்பதோடு இஸ்ரேல் மக்களுக்கு காசா அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.