நாட்டில் முதல் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடும் நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இன்று இடம்பெற்றது.
இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடும் நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இன்று இடம்பெற்றது.
களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்திற்கமைய இந்த தேசிய பிறப்புச் சான்றிதழுக்கு வழங்கப்படும் இலக்கமானது தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குழந்தை பிறக்கும்போதே அடையாள எண்ணைக் கொடுப்பதன் மூலம் மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்குவதற்கு இலகுவாக அமையும்.
இந்த புதிய தேசிய பிறப்புச் சான்றிதழில் பிறந்த இடம் பற்றிய தகவல்கள், உரித்துடையவரின் இலக்கம், முழுப் பெயர், தந்தையின் தேசிய அடையாள இலக்கம், தாயின் தேசிய அடையாள இலக்கம், வழங்கப்படும் சான்றிதழின் சிறப்பு அம்சங்கள், பதிவாளர் நாயகரின் கையொப்பம், சான்றிதழ் உரித்துடையவரின் இனம், பெற்றோரின் திருமணமான மற்றும் திருமணமாகாத நிலையை விலக்குதல்.
இந்த பிறப்புச் சான்றிதழை சிங்களம், ஆங்கிலம் அல்லது தமிழ், மொழிகளில் வழங்குதல்.
சான்றிதழில் உள்ள தகவல்கள் திருத்தப்பட்டால், சரியான தகவல்களை மட்டும் கொண்ட புதிய சான்றிதழ் வழங்குதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.