மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோட்டை முனை மற்றும் கல்லடி ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


















