“பொத்துவில்லில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்காமல் அரசு நிறுத்த வேண்டும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கிருக்கும் பொது அமைப்புக்கள் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
அங்கு மதுபானசாலை அமைக்கப்படவுள்ளமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குட்பட்ட பிரதேசத்தில் பாடசாலைகள், பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், ஜும்மாபள்ளிவாசல், வைத்தியசாலை, நீதிமன்றம், பாலர் பாடசாலை என்பன அமைந்துள்ளன.
அங்கு மதுபானசாலை அமைந்தால் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் மதுபானத்திற்கும் நிறைய பணத்தை ஒதுக்கி சீரழிவார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.