பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
வட் வரி திருத்தச் சட்டமூலம் நேற்று விசேட தினமாக நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருந்தது.
இருப்பினும் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரும் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் சபை நடவடிக்கைகள் இன்று காலை வரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்ற பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய திருத்தங்களின்படி, டீசல், பெட்ரோல், எரிவாயு மற்றும் சோலருக்கும் விவசாய உழவு இயந்திரங்கள் மற்றும் இரசாயன உரங்களுக்கும் வட் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.