டுபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது.
இதனை தொடர்ந்து தனது பதில் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் அதில் ஒன்றில் இலங்கை அணியும் ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் மற்றுமொன்றில் பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.