2024ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
இதன்படி இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2024ஆம் ஆண்டுகான மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
மேலும் 2024ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது