இளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால் மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
30 வயதான குறித்த நபர் அண்மையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் வாயை மூடி தும்மலை அடக்க முயற்சித்ததாகவும், இதன்போது 2.மிமீ அளவிற்கு அவரது மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.