பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை குறிவைக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த மே மாதம் அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவில் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் நியூரோகினின்-3 எனப்படும் மூளையில் உள்ள புரதத்தைத் தடுத்து இந்த மருந்து செயற்படும் என கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சோர்வு, தசை பலவீனம் உட்பட சில பெண்கள் அனுபவிக்கக்கூடிய பரந்த அளவிலான அறிகுறிகளை இந்த மருந்து நிவர்த்தி செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.