தமிழகத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் நேரம் கோரியுள்ளார்.
வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்கிட பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.