சிவனொளிபாத மலைக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைவாக சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுத்தமான குடிநீர் திட்டம் சிறப்பாக முடிவடைந்துள்ளது.
இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக திகழும் சிவனொளிபாத மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரத்தில் காணப்படும் இந்த மலைக்கு பருவகாலத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் யாத்திரிகள் வழிபாடுகளுக்காக செல்வார்கள்.
பொதுவாக யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரவில் படி ஏற ஆரம்பித்தால் ஏறி முடிக்கும் போது காலையில் சூரிய உதயத்தைக் காண முடியும்.
இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பதற்கு ஆரம்பப்புள்ளியாக இந்த மலை காணப்படுகின்றது.
இத்தனை சிறப்பு மிக்க சிவனொளி பாத மலையில் யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை காணப்பட்டது.
இந்தநிலையில் சிவனொளிபாத மலைக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்ரர் மூலம் சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சிறப்பாக முடிவடைந்துள்ளது.
இதற்கமைவாக சிவனொளிபாத மலையில் சுத்தமான குடிநீரை பெறுவதற்காக குடிநீர் வநியோக கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















