விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தனது முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு தப்பி சென்ற அந்நபர் மறுநாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.