இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் கொழும்பில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தமை தொடர்பில் உயர் ஸ்தானிகர் அப்பள்டன் பிரதமருக்கு தனது பாராட்டுக்களையும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் அன்ரூ ட்ரவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.