கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன பொலிஸ் உயர் அதிகாரி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு நாளை வரவுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பொலிஸ்மா அதிபர் ஆகியோர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.