தென்கொரியா மீது வடகொரியா 200-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவிவருகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களை உடனே வெளியேறுமாறு தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதலால் பொதுமக்களுக்கோ அல்லது தமது இராணுவத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் தென்கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.