இலங்கை அணியுடனான தொடரில் தாம் சிறந்த போட்டியை வெளிப்படுத்துவோம் என சிம்பாவே அணியின் தலைவர் தலைவர் கிரேக் எர்வின் தெரிவித்துள்ளார்.
அணியின் சிரேஷ்ட வீரர் சோன் வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாத போதும் அவருக்கு பதிலாக அணிக்குள் சிறந்த வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை எதிர்கொள்வதை போன்ற அணுகுமுறையுடனேயே இலங்கை அணியையும் தாம் எதிர்கொள்ளவுள்ளதாக கிரேக் எர்வின் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கை மைதானத்தில் இடம்பெறும் போட்டிகளை தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கிரேக் எர்வின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை கொழும்பு ஆர்.பிரேமதாசமைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.