டெல்லியில் கடந்த ஓராண்டில் மாத்திரம் தனிநபர் வருவாயானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் டெல்லியில் தனிநபர் வருவாயானது நடப்பு நிதியாண்டில் 3,89,529-ல் ரூபாயிலிருந்து 4,44,768 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது தேசிய சராசரியை விட 158 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”2 கோடி டெல்லி மக்கள் மற்றும் டெல்லி அரசின் இரவு பகலான கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளால் தனிநபர் வருவாய் அதிகரித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் பல புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது மேலும் பல விடயங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் உறங்குவதற்கு முன் செல்ல வேண்டிய தொலைவு அதிகமுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.