மறைந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் 125வது ஜனன தினம் இன்றாகும்.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலி முகத்திடலில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
அதன்படி பண்டாரநாயக்க சிலைக்கு முன்பாக காலை 8.30 மணிக்கு கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1899 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிறந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க பிரித்தானியாவில் சட்டக்கல்வி கற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளை ஆதரித்து ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
1956 இல், பிரதமராக பதவியேற்ற திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க 1956 இல் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.