ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வரை லேசான நிலநடுக்கமாக உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வால் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், அடுக்கு மாடி கட்டடங்கள் , குடியிருப்புகள் , நிறுவனங்கள் போன்றவற்றில் உணரப்பட்ட அதிர்வின் காரணமாக அச்சமடைந்த மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டுள்ளனர். இதனால், வட இந்தியாவின் தலைநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.