யாழ்ப்பாண பிரதேசத்தையும் தீவு பகுதிகளையும் இணைக்கும் முக்கிய பாலத்தை புனரமைத்து தருமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான நேரத்தின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்குப்பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,
“மக்களின் வரிப்பணத்தில் இந்த பாலங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டில் பல பாலங்களை அமைக்க உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஒரு சில உலக நாடுகளுமே உதவியை வழங்கியிருந்தன.
ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்கள் 95 வீதம் நிறைவடைந்துள்ள போதும் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. இதில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டவுடன் உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.