மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது.
அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், உலகின் மிக உயர் தரமான மாட்டிறைச்சியை உற்பத்தி செய்வதே தனது இலக்கு என்று கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த பசுக்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அதே பண்ணையில் தயாரிக்கப்படும் உணவு பசுக்களுக்கு வழங்கப்படும் என்றும், ஜுக்கர்பெர்க் தனது மகள்களின் உதவியோடு இதனை மெருகுப்படுத்துவார் என்றும் குறிப்பிடப்படடுள்ளது.