”சுற்றுச்சூழல் நலன் கருதிபிளாஸ்டிக் துடைப்பங்களின் இறக்குமதியைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக” கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”லஞ்ச் ஷீட்” பாவனையைத் தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும், துறைசார் கண்காணிப்புக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், “லஞ்ச் ஷீட்”களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு, மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு, இக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதோடு அதனைக் கடைப்பிடிக்க ஆறு மாதகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.