இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குனர் எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அயலான் பல தடைகளுக்கு பின்னர் பொங்கலுக்கு வெளியாகி 50 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
80 கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம் தமிழி ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு பிரம்மாண்டமான ஆங்கில படமாகும். ஏலியனை வைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி படம் கொடுப்பதென்பது எளிதில்லை என திரைப்படத்தை பார்த்த அனைவரும் கூறி வரும் நிலையில் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.