பொலன்னறுவை -வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பொலன்னறுவை – வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலையடுத்து மீண்டும் இரண்டு தரப்பினரும் நேற்று இரவு மோலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலில் இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்கைப் பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் கைதிகளுக்கிடையே மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கலகம் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
மோதலையடுத்து கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிவர்கள் அருகில் உள்ள காடுகளில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட தரப்பினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படும் சுமார் 50 கைதிகளில் 17 கைதிகள் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமறைவாகியுள்ள ஏனைய கைதிகளை விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியாக தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.