அரசியல் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 பேருக்கு மரணதண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீனிவாஸின் கொலை வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி மர்மக் கும்பலொன்றால் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 15 பேரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
குறித்த வழக்கின் விசாரணைகள் கடந்த 2 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் குறித்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.