ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
16பேர் கொண்ட இந்த அணியில், லஹிரு உதார, சமிக குணசேகர மற்றும் மிலான் ரத்னாயக்க ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்தை பெறுகின்றனர்.
தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியில், குசல் மெஸ்டிஸ், திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷங்க, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசித்த பெணார்டோ, விஷ்வ பெணார்டோ, கசுன் ராஜித, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு உதார, சமிக குணசேகர மற்றும் மிலான் ரத்னாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது.
இதில் முதலாவதாக நடைபெறும் இரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி, எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.