புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அதன்படி இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள், மின்சக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த போதிலும் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 8 வருடங்களின் பின்னர் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.