அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான 4 இலட்சம் புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறாத பயனாளர்களும் இம்முறை விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளதுடன்
தற்போது அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.